Latestஇந்தியாஉலகம்

169 பயணிகளுடன் புதுடில்லிக்கு சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது

புதுடில்லி , மே 2 – Bhubaneswar நகரிலிருந்து புதுடில்லி புறப்பட்ட Vistara விமான நிறுவனத்தின் விமானம் நேற்று ஆலங்கட்டி மழையில் சிக்கியதைத் தொடர்ந்து உடனடியாக அந்த விமானம் மீண்டும் Biju Patnaik அனைத்துலக விமான நிலையத்தில் அவரசரமாக தரையிறங்கியது . விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பெய்த ஆலங்கட்டி மழையினால் அந்த விமானம் சேதம் அடைந்தததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த விமானத்தின் முன்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக முன்னோடி விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Biju Patnaik அனைத்துலக விமான நிறுவனத்தின் இயக்குநர் prasnna Pradhan தெரிவித்தார்.

Vistara விமானத்தின் UK788 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக கண்ணாடியில் விரிசல் மற்றும் சேதத்தை எதிர்நோக்கியதாக அந்த விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது. விமானத்தின் ராடார் மறைக்கப்பட்டுள்ள அதன் முன்புற கண்ணாடிப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதாக
Vistara Airlines சின் பயிற்சி பிரிவின் தலைவரான Vikram Mohan Dayal கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!