மலாக்கா, ஆகஸ்ட்-22, மலாக்கா, மாரா (MARA) கட்டடத்தில் உள்ள தனது நகைக் கடையிலிருந்து 29.26 கிராம் எடையிலான 2 தங்கக் காப்புகள் திருடப்பட்டதால், கடை உரிமையாளர் பத்தாயிரம் ரிங்கிட் நட்டமடைந்தார்.
நேற்று மதியம் நிகழ்ந்த அச்சம்பவத்தில், வாடிக்கையாளர் போல நுழைந்த நடுத்தர வயது மாது தங்கக் காப்பைப் பார்க்கக் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணான நூர் அக்மார் அபு பாக்காரும் (Noor Akhmar Abu Bakar) எடுத்துக் கொடுக்க, அம்மாது மேலுமொரு தங்கக் காப்பைக் கேட்டுள்ளார்.
2 காப்புகளும் கையில் கிடைத்த வேகத்தில் கடையிலிருந்து ஓட்டம் பிடித்த மாது, வெளியில் ஏற்கனவே தயாராக நின்றிருந்த Toyota Yaris காரிலேறி மறைந்தார்.
எனினும், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், அவருக்குத் துணையாக இருந்த தாயிடமோ முரட்டுத் தனமாக எதுவும் நடந்து கொள்ளவில்லை.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கக் கட்ட விசாரணையில், நான்கு கை விரல் ரேகைப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கட்டடத்திற்குள் திருடியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 380-வது பிரிவின் கீழ் அச்சம்பம் விசாரிக்கப்படுவதாக அலோர் காஜா போலீஸ் கூறியது.