கோலாலம்பூர், ஜூன் 25 – கடந்த ஜூன் 1 ஆம் திகதி, 8வது முறையாக பாங்கியில் நடைபெற்ற ‘Kids Got Talent’ போட்டியில் செராஸ்யைச் (Cheras) சேர்ந்த 16 வயது திவேந்திரன் ராஜூ (Divendran Rajoo) மற்றும் 12 வயது ஹஷ்வீந்திரன் ராஜூ (Hashvindraan Rajoo) ஆகிய இரு சகோதரர்கள் சிலம்பம் விளையாடி சாதனை படைத்துள்ளனர்.
ஏறக்குறைய 200 பேர் பங்கேற்ற இப்போட்டியில், தங்களது சிலம்பக் கலையை முன்னிறுத்தி ‘Most Potential Entertainer’ எனும் விருதையும், 20வது முறையாக நடைபெறவுள்ள அமெரிக்கா Got Talent நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் தன் வசமாக்கியுள்ளனர்.
4 வருடங்களாக மலேசியச் சிலம்பக் கோர்வை கழகத்தில் பயிற்சி பெற்று வரும் இவர்கள், The Silambam Korvai Brothers எனும் பெயரில் பல போட்டிகளில் இணைந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
இதனிடையே, 2021ஆம் ஆண்டு இடைவிடாத மெய்நிகர் சிலம்பம் வகுப்பின் சாதனை முயற்சியை முடித்ததற்காக மலேசிய சாதனை புத்தகத்திலும் இவர்களின் பெயர் இடம்பெற்றுதும் குறிப்பிடத்தக்கது.