கோலாலம்பூர், ஏப்ரல் 20 – மலேசிய வரலாற்றில் அதிக காலம் தேசிய போலீஸ் படைத் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவரான துன் ஹனிப் ஓமார், இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு வயது 85.
அதிகாலை 2 மணியளவில் துன் ஹனிப் காலமானதை, அவரின் மூத்த புதல்வர் உறுதிப்படுத்தினார்.
1974-ஆம் ஆண்டு வெறும் 35-ந்தே வயதில் தேசியப் போலீஸ் படைத் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
அத்தனை இளம் வயதில் IGP-யாக ஒருவர் பதவியேற்றது இன்றளவும் சாதனையாக உள்ளது.
தனது பதவிக் காலத்தில் மிகவு கண்டிப்புக்குப் பெயர் பெற்றவரான துன் ஹனிப், சரியாக 20 ஆண்டுகள் கழித்து 1994-ல் பணி ஓய்வுப் பெற்றார்.
அந்தச் சாதனையும் இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை.
தேசியப் போலீஸ் படைத் தலைவராக இருந்த போது,
AIA கட்டடம் 1975-ஆம் ஆண்டு பிணைப்பிடிக்கப்பட்டது, 1987 Operasi Lalang நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பாதுகாப்பு நிகழ்வுகளை அவர் கையாண்டுள்ளார்.
அரச மலேசியப் போலீஸ் படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவை அமைத்ததோடு, Jalan Bluff போலீஸ் தலைமையகத்தை Bukit Aman என பெயர் மாற்றியப் பெருமையும் இவரையே சாரும்.
துன் ஹனிப், மனைவி தோ புவான் ஹமிடா அப்துல் ஹமிட் மற்றும் ஐந்துப் பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார்.