Latestமலேசியா

20 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மானியச் சேமிப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-புடி மடானி RON95 எரிபொருள் மானியம் உட்பட உதவித் தொகையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் கிடைக்கும் சேமிப்பிலிருந்து 20 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ளது. STR, SARA உட்பட இலக்கு வைக்கப்பட்ட ஆறு முக்கிய உதவித் திட்டங்கள் மூலம் அத்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார்.

STR மற்றும் SARA திட்டங்களுக்கான ஒதுக்கீடு 15 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு மக்கள் மத்தியில் இலக்கு வைக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் Rahmah விற்பனைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக இவ்வாண்டு 600 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது முந்தைய ஒதுக்கீடுகளை விட மிக அதிகமான தொகை என மேலவையில் Amir Hamzah விளக்கினார். இலக்கு வைக்கப்பட்ட RON95 எரிபொருள் மானியங்களை அமல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் ஆண்டுச் சேமிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

வாழ்க்கைச் செலவினச் சவால்களை எதிர்கொள்ள 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து 600 மாநிலத் தொகுதிகள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் உள்ள 40 இடங்களில் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விற்கும் Jualan Rahmah MADANI திட்டத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. 2023-இல் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது 100 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

குழந்தைகளின் அடிப்படைப் பள்ளித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சுமார் 800 மில்லியன் மதிப்பிலான ‘ஆரம்பக்காலப் பள்ளிப் படிப்புக்கான உதவித் திட்டம்’ (BAP) வழங்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் நிதிச் சுமையைக் குறைக்க, 216 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் ‘My50 மாதாந்திரப் பயணச் சீட்டு’ திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பேருந்துப் பயணிகளுக்குப் பயனளிக்கும் BAS.MY திட்டமும் உள்ளது.

Budi95 திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்ட RON95 எரிபொருள் மானியங்களைச் செயல்படுத்துவதன் வாயிலாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள், நாணய மாற்று விகிதங்கள் மற்றும் உண்மையான பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அரசின் ஆண்டு நிதிக் செலவில் 2.5 பில்லியன் முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் Amir Hamzah குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!