Latestமலேசியா

20 வயதில் F1 உலக சாம்பியன்; வரலாறு படைத்தார் கிமி அன்டோனெல்லி

மெக்சிகோ சிட்டி, நவம்பர்-2,F1 கார் பந்தய வரலாற்றில், 20 வயது 68 நாட்களில் உலக சாம்பியன் பட்டம் வென்று, மிக இளம் வயதில் இச்சாதனையைப் படைத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இத்தாலியின் கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli).

நேற்றைய மெக்சிகோ GP பந்தயத்தில், Mercedes அணியைச் சேர்ந்த அன்டோனெல்லி மூன்றாவது இடத்தைப் பிடித்து, உலக சாம்பியன் பட்டத்தை உறுதிச் செய்தார்.

Red Bull அணியின் மெக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) முதலிடத்தைப் பிடித்தார்.

Ferrari அணியின் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

நேற்று மூன்றாமிடத்தைப் பிடித்தாலும் இவ்வாண்டு இதுவரையிலான மொத்தப் புள்ளிப்பட்டியலில், யாரும் இனி தன்னை முந்த முடியாத அளவை அன்டோனெல்லி எட்டினார்.

இதன்மூலம், 2010-ஆம் ஆண்டு தனது 23 வயதில் உலக சாம்பியனான செபாஸ்டியன் வெட்டலின் (Sebastian Vettel) சாதனையை அன்டோனெல்லி முறியடித்துள்ளார்.

மேலும், 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகு, F1 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தப் பருவத்தில் இதுவரை 9 பந்தய வெற்றிகளைப் பதிவுச் செய்துள்ள அன்டோனெல்லி, தனது வெற்றிக்காக மெர்சிடிஸ் அணி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, Cadillac அணியின் Valtteri Bottas விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, 71 சுற்றுகளைக் கொண்ட பந்தயம் 46-ஆவது சுற்றில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் தொடங்கிய பந்தயத்தில், அன்டோனெல்லி மூன்றாவது இடத்தைத் தக்கவைத்து, வரலாற்றுச் சாதனையுடன் இலக்கைக் கடந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!