Latestமலேசியா

2024/2025ஆம் ஆண்டிற்கான EC-Council சைபர் பாதுகாப்பு சிறப்பு சான்றிதழ் பயிற்சி மற்றும் பணியிட திட்டம் அறிவிப்பு – மித்ரா

கோலாலம்பூர், ஜனவரி 24 – EC-Council சைபர் பாதுகாப்பு சிறப்பு சான்றிதழ் பயிற்சி மற்றும் பணியிட திட்டத்தை அறிவித்திருக்கிறது மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவான மித்ரா.

தற்போதைய இணைய உலகில் சைபர் பாதுகாப்பு துறை மிக முக்கிய பங்காற்றி வருவதுடன், இந்தத் துறையில் தொழிலாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பல மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், துறை சார்ந்த தொழில்திறன்களுக்கான பயிற்சியும் பொதுமான அனுபவமும் இல்லாத காரணத்தால், சைபர் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புகளைத் தவற விடுக்கின்றனர்.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டும், தொழில்நுட்பப் பட்டதாரிகளின் திறன்களை மேம்படுத்தவும், மித்ரா 200 பேருக்கு இந்த சிறப்பு பயிற்சி திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

இந்தப் பயிற்சி திட்டத்தில் EC-Council Security Specialist (ECSS), Certified Network Defender (CND) மற்றும் Certified Ethical Hacker (CEH) போன்ற சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பயிற்சி காலத்தில் பங்கேற்பாளர்களுக்கு வாழ்கைச் செலவுக்கான உதவித்தொகையான allowance வழங்கப்படும் என்றும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்குத் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று மித்ராவின் சிறப்புப் பணிக்குழு தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

இந்த EC-Council சைபர் பாதுகாப்பு சிறப்பு சான்றிதழ் பயிற்சி மற்றும் பணியிட திட்டத்திற்கு விண்ணப்பங்கள் Intellize இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார், அவர்.

முதல் கட்ட விண்ணப்பங்களுக்கு எதிர்வரும் ஜனவரி 31 வரை இணைப்பு திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பல கட்டங்களாக 25 பேரைக் கொண்ட 8 குழுக்களில் நடத்தப்படவுள்ள நிலையில், முதல் வகுப்பு 2025, பிப்ரவரி மாதம், மற்றும் இரண்டாவது வகுப்பு 2025, ஏப்ரல் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!