Latestமலேசியா

2025 STPM தேர்வு முடிவுகள்: சாதனையாக 1,336 மாணவர்கள் 4.00 CGPA பெற்று தேர்ச்சி

கோலாலாம்பூர், ஜூன்-19-2025 STPM தேர்வில் மொத்தம் 1,336 மாணவர்கள் முழுமையான 4.00 CGPA மதிப்பெண்களைப் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளனர்.

கடந்தாண்டு இந்த எண்ணிக்கையானது 1,266 ஆக இருந்த வேளையில், இவ்வாண்டு 70 மாணவர்கள் கூடுதலாக இந்தச் சாதனையை எட்டியுள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த CGPA-வும் கடந்த ஆண்டின் 2.85-லிருந்து இவ்வாண்டு 2.88 ஆக உயர்ந்துள்ளதாக, மலேசியத் தேர்வு மன்றமான MPM கூறியது.

இது 2013-ல் STPM மறுசீரமைக்கப்பட்ட பிறகு பதிவான மிக உயர்ந்த சாதனையாகும்.

இவ்வேளையில், தேர்வு எழுதிய 38,144 மாணவர்களில் 99.96 விழுக்காட்டினர் அல்லது 38,128 மாணவர்கள் 2025 STPM சான்றிதழைப் பெற தகுதிப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!