
கோலாலம்பூர், செப்டம்பர்-6,நாட்டில் வாகனப் பரிசோதனைகள் விரைவில் 24 மணி நேரமும் கிடைக்கப்பெற வாய்ப்புள்ளது.
வாகன உரிமையாளர்களின் வசதிக்காக, அடுத்தாண்டு ஜனவரி முதல் 24 மணி நேர சேவையைத் தொடங்க, கணினி மையப்படுத்தப்பட்ட வாகனப் பரிசோதனை மையமான புஸ்பாகோம் (PUSPAKOM) திட்டமிட்டுள்ளது.
என்றாலும், வரும் நவம்பர் மாதம் முதல் 7 நாட்களும் இயங்கும் சேவைக்குக் கிடைக்கும் பொது மக்களின் ஆதரவு, ஊழியர்களின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பொறுத்தே இது நடைமுறைப்படுத்தப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி Mahmood Razak Bahman தெரிவித்தார்.
இந்த சேவை விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 மணி நேர வேலை மற்றும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஓய்வு வழங்கும் பணி நேர மாற்றங்கள் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், 24 மணி நேர சேவையுடன் சேர்த்து, நேரடியாக வந்து பரிசோதிக்கும் சேவையை விரிவுபடுத்தவும், சமுதாய மாற்றத்திற்குப் பங்களிப்போரை அங்கீகரிக்க ‘சமூக நாயகன்’ விருதை அறிமுகப்



