
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – 2030-ஆம் ஆண்டிற்குள், 60 வயதை அடையும் போது 10 EPF உறுப்பினர்களில் 6 பேர் குறைந்தபட்சம் 390,000 ரிங்கிட் சேமிப்பை வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது, 10 பேரில் 4 பேர் மட்டுமே இந்த இலக்கை அடையும் நிலையில் உள்ளனர். ஓய்வு பெற்ற பிறகு 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ வேண்டிய நிலையில், பல மலேசியர்களின் ஓய்வூதிய சேமிப்பு போதுமானதாக இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முறையான வேலைவாய்ப்பில் இல்லாத லட்சக்கணக்கான மலேசியர்களை ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தில் இணைப்பதும் சவாலாக உள்ளது. ஓய்வூதியத்திற்காக சேமிக்க, மக்களுக்கு நிலையான வருமானமும் நல்ல வேலைவாய்ப்பும் தேவை என்று அவர் கூறினார்.
மேலும், முதியோர் நலனுக்காக அரசாங்கம் 1.26 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகவும், இதன் மூலம் 180,000 முதியவர்கள் பயனடைவதாகவும் அன்வார் தெரிவித்தார்.



