Latestமலேசியா

Munchy’s நிறுவனத்தின் 35-வது ஆண்டு நிறைவு: 69-ஆவது தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையில் உற்சாகப் பங்கேற்பு

69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புத்ராஜெயா சதுக்கத்தில் இன்று பிரம்மாண்டமான முழு அணிவகுப்பு ஒத்திகை மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஒத்திகையின் போது, வான்வெளியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் ஜெட் விமானங்களின் சாகசக் காட்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இடம்பெற்றன.

மேலும், கலைக் குழுவினரின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகளும், கண்கவர் அணிவகுப்புகளும் ஒத்திகைக்கு மேலும் மெருகூட்டின.

ஒத்திகையாக இருந்தாலும், பொது மக்களும் திரளாக வருகை தந்து இந்நிகழ்வை மிகவும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த அணிவகுப்பின் ஓர் அங்கமாக, மலேசியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான Munchy’s அதன் 35-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இதில் பங்கெடுத்துள்ளது.

“Taste Munchy’s, Taste Happiness” என்ற கருப்பொருளின் கீழ், பொது மக்கள் இணைந்து மகிழும் வகையில் அங்குச் சிறப்புக் கூடாரங்களும் அமைக்கப்படவுள்ளன.

கடந்த 35 ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆதரவளித்து வரும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், Munchy’s நாடு தழுவிய அளவில் சுமார் 100 இடங்களுக்குச் செல்லும் சிறப்பு பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக, மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காகச் சேவையாற்றும் போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று முன்வரிசைப் பணியாளர்களுக்குத் தங்கள் தயாரிப்புகளை வழங்கி Munchy’s நன்றியைத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய ஒத்திகை நிகழ்வு தேசிய உணர்வோடும், பொது மக்களின் பெருந்திரளான பங்கேற்போடும் மிகவும் குதூகலமாக நிறைவடைந்தது.

இவ்வாண்டு அணிவகுப்பில் பங்கேற்பது பெருமையளிப்பதாக, Munchys நிறுவனத்தின் universal தலைமை செயலதிகாரி Rodney Wong சொன்னார்.

 

இன்றைய ஒத்திகையில் பொது மக்களுக்காக பல்வேறு அங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் மகிழ்ச்சியடைந்தது மனநிறைவாக இருந்ததாக, Munchy’s விநியோகப் பிரிவு மேலாளர் Lee You Ning கூறினார்.

 

இந்நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் தங்களின் அனுபவங்களை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

 

மக்களின் பேராதரவுடன் 35 ஆண்டுகளைக் கடந்துள்ள Munchy’s நிறுவனம், இந்த 69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து தேசிய உணர்வை மேலும் மெருகூட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!