Latestமலேசியா

மலேசியாவில் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணக் கொண்டாட்டம்: ‘ஒன்றா இரண்டா’ நேரடி இசைநிகழ்ச்சி அக்டோபர் 10-ல் கோலாலம்பூரில் அரங்கேறுகிறது

கோலாலாம்பூர், ஆகஸ்ட்-29,MyEvents International நிறுவனம் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த நேரடி பொழுதுபோக்கு அனுபவங்களை உள்ளூர் இரசிகர்களுக்கு வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் Radaan Mediaworks உடன் இணைந்து ‘ONDRA RENDA 25 YEARS OF GVM’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்வை MyEvents International அறிவித்துள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 10, சனிக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள The Arch Galeries-யில் நடைபெறவுள்ளது.

இது வழக்கமான ஒரு இசை நிகழ்ச்சி அல்ல. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சினிமா ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்கள் கலந்துகொள்ளும் வகையில், கெளதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் ஒரு தனித்துவமான அனுபவமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக திட்ட இயக்குநர் இன்பா, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

SPEECH

மிகச்சிறந்த கலைஞர்கள், நேரடி இசைக் குழு மற்றும் மறக்க முடியாத கதைசொல்லல் அமர்வுகளுடன் மலேசியாவில் ஒரு புதிய பொழுதுபோக்கு மைல்கல்லை இது உருவாக்கவுள்ளதாக, நிகழ்ச்சி விளம்பரத்திற்காக மலேசியா வந்துள்ள Radaan Mediaworks நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.

SPEECH

எல்லைகளைக் கடந்து பார்வையாளர்களோடு உணர்வுப்பூர்வமாக இணைவதை Radaan Mediaworks எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய சினிமா மீது அளப்பரிய அன்பு கொண்ட மலேசிய இரசிகர்கள் எப்போதும் தங்களின் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்கள் என ராதிகா மேலும் சொன்னார்.

SPEECh

கெளதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுக்கால திரைப்பயணம் என்பது பல தலைமுறை இரசிகர்களை ஈர்த்த இசை, காதல் மற்றும் மறக்க முடியாத காட்சிகளின் சங்கமம்.

எனவே, MyEvents International நிறுவனத்துடன் இணைந்து, இந்த பிரீமியம் பொழுதுபோக்கு நிகழ்வை முன்னெடுப்பதில் பெருமை கொள்வதாகவும், அக்டோபர் 10-ஆம் தேதி மலேசிய இரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத மாலையாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும் ராதிகா நம்பிக்கைத் தெரிவித்தார்.

SPEECH

இவ்வேளையில், சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது ஒரு கனவு போல இருப்பதாகவும், இந்தத் தருணத்தை மலேசியாவில் உள்ள தனது அன்பான இரசிகர்களுடன் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி என, நிகழ்வின் நாயகன் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார்.

SPEECh

இந்த ‘ONDRA RENDA’ தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நிகழ்வு என வருணித்த இயக்குநரும் தயாரிப்பாளருமான அவர், இது வெறும் மேடைப் பாடல்களுக்கான நிகழ்வு மட்டுமல்ல; மாறாக, தனது 25 ஆண்டுகால திரைவாழ்வின் பின்னணியில் உள்ள கதைகள், உணர்வுகள், படைப்பு உத்வேகங்கள் மற்றும் சுவாரசியமான அனுபவங்களை இரசிகர்களோடுய் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நேரடி சந்திப்பு என்றார்.

SPEECH

கௌதமுடன் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், சத்ய பிரகாஷ், சைந்தவி, பால் டப்பா, பிளேஸ், ஹரி பிரியா, கிருஷ் மற்றும் தலைசிறந்த நேரடி இசைக் கலைஞர்கள் இணைந்து இந்த மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.

அக்டோபர் 10-ஆம் தேதி The Arch Galeries-யில் இந்த சினிமா மற்றும் இசைப் பயணத்தை ஒன்றாகக் கொண்டாட அனைவரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!