Latestமலேசியா

“வனிதா ஐகோன் வாஜா நெகிரி செம்பிலான்” விருது; தேசிய இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பரமேஸ்வரி மனோகரன்

சிரம்பான், ஆகஸ்ட் 29 —2026/2027ஆம் ஆண்டுக்கான Wanita Ikon Waja Negeri Sembilan விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இறுதிச்சுற்றுப் போட்டியாளர்களில், Sunshine Educational Group (M) Sdn. Bhd. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மூத்த தலைமையாசிரியர் பரமேஸ்வரி மனோகரனும் இடம்பெற்றுள்ளார்.

300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 பெண்களில் ஒருவரான பரமேஸ்வரி, தற்போது நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்விருதின் தேசிய இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் அவருக்கு விருதை வழங்கினார்.

கல்வித்துறையில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் பரமேஸ்வரி, மலேசிய பாலர் பள்ளி Franchise துறையில் இந்தியப் பெண் தொழில்முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார். அந்நிறுவனத்தில் தற்போது 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியுடன் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் அவர், தமிழ்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகள் மற்றும் உதவி தேவைப்படும் சமூகங்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை மற்றும் மூலிகைத் தாவரங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு இயக்கங்களிலும் அவர் பங்களிப்பு செய்துள்ளார்.

இந்த அங்கீகாரம் தனது கல்வி மற்றும் சமூகப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஊக்கமாக அமைந்துள்ளதாக பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!