Latest

நாய் கடித்து குதறிய விவகாரம்: அண்டை வீட்டாருக்கு RM248,000 இழப்பீடு வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,கோலாலம்பூர், செகாம்புட்டில் தனது இரண்டு ‘German Shepherd’ வளர்ப்பு நாய்கள் அண்டை வீட்டாரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 248,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும் செலவுத் தொகையை வழங்குமாறு தொழிலதிபர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தில், ​வீட்டு வளாகத்திலிருந்து தப்பிய நாய்களை முறையாகப் பூட்டி வைக்காமல் அலட்சியமாக இருந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், நாய் உரிமையாளரான Ong Thiam Boon என்பவரே இதற்கு முழுப் பொறுப்பு என அறிவித்தது.

மெதுவோட்டத்தின் போது நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட Kamal Abdullah, கீழே விழுந்து முதுகு தண்டு பாதிப்பு உட்பட பலத்த காயங்களுக்கும் கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார்.

இந்நிலையில், ​வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் மருத்துவச் செலவுகள், வலி மற்றும் வேதனைக்கான பொது இழப்பீடு மற்றும் நீதிமன்றச் செலவுகள் ஆகியவை அடங்கும்.

ஆக்ரோஷமான வளர்ப்பு பிராணிகள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு பாதுகாப்பதில் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!