
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29,நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய திபெத்தில் உள்ள 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள மலேசியர்களின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து சீன அதிகாரிகளிடம் இருந்து வெளியுறவு அமைச்சு தீவிரமாக உறுதிப்படுத்தி வருவதாக அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சையிட் முகமட் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மலேசியர்களை தாயகம் அழைத்து வருவது தொடர்பாக நேப்பாள அதிகாரிகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் என அவர் கூறினார்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) வாயிலாக நேப்பாளத்திற்குத் தேவையான பேரிடர் உதவிகளை வழங்குவது குறித்தும் மலேசியா பரிசீலித்து வருகிறது.



