கோலாலம்பூர், ஜூலை 10 – EPF – ஊழியர் சேம நிதி வாரியத்தின், 55 வயதுக்கு உட்பட்ட 13.01 மில்லியன் மொத்த சந்தாதாரர்களில், 3.61 மில்லியன் அல்லது 27.8 விழுக்காட்டினர், “ப்ளெக்சிபிள்” அல்லது தளர்வு கணக்கில் ஆரம்பத் தொகையை சேர்த்துள்ளனர்.
அதன் வாயிலாக, ஜூன் 24-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 11.52 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சந்தாதாரர்களின் தளர்வு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே சமயம், 5.12 பில்லியன் தொகை, ஓய்வூதிய கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதை, நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஊழியர் சேம நிதி வாரியத்தின், 55 வயதுக்கு உட்பட்ட 13.01 மில்லியன் மொத்த சந்தாதாரர்களில், 3.16 மில்லியன் அல்லது 24.3 விழுக்காட்டினர், இதுவரை 7.81 பில்லியன் தொகையை தளவு கணக்கிலிருந்து மீட்டுள்ளதாக, நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிவில் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாறிவரும் வேலை வாய்ப்புகள், முதுமை, சாந்தாதாரர்களின் வாழ்க்கை சுழற்சிக்கு ஏற்ப, மாறி வரும் தேவைகளை சமாளிக்க உதவும் வகையில் ஊழியர் சேம நிதி வாரியம் அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.