ஐஸ்லாந்து, நவம்பர்-22 – ஐஸ்லாந்து நாட்டின் ரெய்கியவிக் (Reykjanes) அருகே உள்ள எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது.
வெடிப்பைத் தொடர்ந்து எரிமலைக் குழம்புகள் வழிந்தோடுவதும், அடர்த்தியான புகை வானைச் சூழ்ந்திருப்பதும் வைரலான வீடியோக்களில் தெரிகிறது.
இதனால் 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலையில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள வசதி கட்டமைப்புகளுக்குப் பாதிப்போ, வான் போக்குவரத்துகளுக்கு இடையூறோ ஏற்படவில்லை.
என்றாலும், எரிமலை தொடர்ந்து வெடிக்கலாமென்பதால் அருகில் வசிக்கும் மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுள்ளனர்.
மூன்றாண்டுகளில் இந்த எரிமலை வெடிப்பது இது பத்தாவது முறையாகும்.