
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18 – பல ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் டோட்டோவில் (Sports Toto) தொடர்ந்து எண்களைத் தேர்வு செய்து வந்த இருவருக்கு மொத்தம் 15.3 மில்லியன் ரிங்கிட் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
பேராக்கைச் சேர்ந்த 62 வயது நபர், தனது பேரக்குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழிலுள்ள எண்களைப் பயன்படுத்தி பந்தயம் கட்டி 11.8 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் டோட்டோவில் பங்கேற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பினாங்கைச் சேர்ந்த 65 வயது நபர், பல ஆண்டுகளாக ‘லக்கி பிக்’ முறையில் பந்தயம் கட்டி வந்த நிலையில் 3.5 மில்லியன் ரிங்கிட் பரிசை வென்றுள்ளார்.
தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையை குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் ஓய்வுக்கால வாழ்க்கைத் தேவைகளுக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.



