
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12,
30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும்.
கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அந்த நினைவூட்டலை விடுத்துள்ளது.
மலேசியப் பயணத்திற்குத் தேவையான பணம் வைத்திருப்பதற்கான ஆதாரம், தங்குமிட வசதிகள் குறித்த விவரங்கள், செல்லுபடியாகும் return டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.
30-நாள் விசா இல்லாமல் மலேசியாவுக்கு நுழைவது இங்கு வேலை செய்வதற்காக அல்ல என்பதையும் தூதரகம் நினைவுறுத்தியது.
30-நாள் விசா இல்லாத சலுகையின் கீழ் மலேசியா வந்திறங்கிய இந்தியப் பிரஜைகள் பலருக்கு, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்யாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டி, இந்தியத் தூததரகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த 30-நாள் விசா இல்லா சலுகைத் திட்டத்திற்கான நிபந்தனைகளை பின்வரும் இணைய அகப்பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
https://www.kln.gov.my/web/ind_new-delhi/requirement_foreigner?fbclid=IwQ0xDSwMHaytjbGNrAwdrImV4dG4DYWVtAjExAAEeOuHdF-uxqSpxDU-pChtihaTbvPPMvtkHJ_DyekaOE9Zq925wAvz241R7tJs_aem_e0rdSFpcyZHoAGXNsGj7sQ