
ஜோகூர் பாரு, ஏப்ரல்-24-2021 முதல் இவ்வாண்டு மார்ச் வரை, நாடு முழுவதும் மொத்தம் 31,517 திவால் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த திவால் சம்பவங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை, அதாவது 46 விழுக்காடு, தனிநபர் கடன்களாலேயே ஏற்பட்டுள்ளன.
பொருளாதார அமைச்சர் Akmal Nasrullah Mohd Nasir அதனைத் தெரிவித்தார்.
இந்நிலை இளைய தலைமுறையினரிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், 34 வயதிற்குட்பட்ட சுமார் 4,700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் மோசமான நிதி நிர்வாகமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
எனவே, அரசாங்கம் நிதி கல்வியறிவு குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொது மக்களும் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப கடன்களை திட்டமிட வேண்டும் என்றும், தேவையற்ற நிதி சிக்கல்களில் சிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



