பாங்கி, ஜூன் 13 – கல்வி அமைச்சில் தலைமை உதவி இயக்குனரான பணியாற்றிய ஜெயகுமார் சி. கோரன் , தனது 35 ஆண்டுகால சேவைக்காக கல்வி அமைச்சின் நற்சான்றிதழைப் பெற்றுள்ளார். Bangi Avanue மாநாட்டு மையத்தில் நடைபெற்ற Jasamu DiKenang நிகழ்வில் கல்வி அமைச்சர் பாட்ஸ்லினா சிடேக் (Fadzlina Sidek ) இந்தச் சான்றிதழை ஜெயக்குமாருக்கு வழங்கி சிறப்பித்தார்.
மேலும் கல்வி அமைச்சில் கல்வி வளங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஜெயக்குமார் முதன்மை உதவி தலைமை இயக்குநராகப் பணியாற்றியபோது போது அவர் ஆற்றிய சிறந்த வேவைக்காக கல்வி அமைச்சின் சார்பில் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் பாட்ஸ்லினா தெரிவித்துக் கொண்டார்.
ஆர்டிஎம் Didik TV மற்றும் EDUweb TV KPM ஆகியவற்றிற்கான கல்வி வீடியோக்களை தயாரிப்பதில் ஜெயக்குமார் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். குறிப்பாக கோவிட் தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு காலக்கட்டத்தில் வீட்டிலிருந்தே கல்வி பயிலும் மாணவர்களுக்காக வீடியோக்கள் தயாரிக்கும் பணிக்கு ஜெயக்குமார் தலமையேற்றிருந்தார்.
தமிழ்ப்பள்ளிகள் உட்பட தொடக்கப் பள்ளிகள், பாலர் பள்ளிகள் , மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கல்வி தொடர்பான அந்த காணொளிகளை ஆர்.டிஎம்மின் OKEY TV, Eduweb TV, Delima ஆகிய ஊடகங்களில் இப்போதும் கூட மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் பார்த்து பயன்படுத்த முடியும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் தொண்டூழி ராணுவப் படையில் ஆற்றிய சேவைக்காக மாட்சிமை தங்கிய பேரரசர் 1987 ஆம் ஆண்டு அவருக்கு லெப்டனன் மூடா விருதையும் வழங்கி கௌரவித்துள்ளார். கல்வி தொடர்பான காணொளிகளுக்காக Beyond Japan அமைப்பின் விருதையும் பெற்றுள்ள அவர் பெற்றுள்ளார். மேலும் Teruntum ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் Tengku Ampuan Afzan ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் அவர் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். இதுதவிர Sarawak , Sarikei ஒதுக்குப்புற பகுதியிலும் ஆசியரியாக பணிபுரிந்துள்ளார்.