Latestமலேசியா

ஐரோப்பா நாடுகளுக்காக லீக் சாம்பியன் பட்டத்தை போர்த்துகல் வென்றது

மூனிக், ஜூன் 9 – ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான லீக் சாம்பியன் பட்டத்தை போர்த்துகல் காற்பந்து அணி இரண்டாவது முறையாக வென்றது. கூடுதல் நேரத்தில் 2-2 என்ற சமநிலைக்குப் பிறகு, பெனால்டியின் மூலம் போர்த்துகல் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அணியை வீழ்த்தியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
( Cristiano Ronaldo) போர்ச்சுகல் அணிக்கு இரண்டாவது நேஷன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல உதவினார்.

ரொனால்டோ அடித்த 138வது அனைத்துலக கோல் இந்த ஆட்டத்தில் வெற்றியாளரை நிர்ணயிப்பதற்கான பெனால்டிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அல்வாரோ மொராட்டா ( Alvaro Morata) பெனால்டியை தவறவிட்டதால் ரூபன் நெவ்ஸ் ( Ruben Neves ) அடித்த கோலினால் போர்த்துகல் குழுவுக்கான வெற்றியை உறுதிசெய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!