Latestமலேசியா

3R விவகாரங்களில் BN இளைஞர் அணி மத வேறுபாடின்றி ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் — MIC இளைஞர் தலைவர் அர்விந்த்

மலாக்கா, செப்டம்பர் 2 — இனம், மதம் மற்றும் அரசாட்சி தொடர்பான 3R விவகாரங்கள் எழும்போது, அது எந்த மதத்தினரின் உரிமையைப் பாதித்தாலும் பாரிசான் நேஷனல் இளைஞர் அணி ஒரே குடையின் கீழ், ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என MIC இளைஞர் அணித் தலைவர் அர்விந்த் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்காவில் பாரிசான் நேஷனல் இளைஞர் அணித் தலைவர் டத்தோ Dr. Akmal Saleh மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ Shanmugam முன்னிலையில் நடைபெற்ற ம.இ.கா இளைஞர் அணியின் தேர்தல் இயந்திரம் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இஸ்லாம், இந்து மதம் அல்லது வேறு எந்த மதம் சார்ந்த விவகாரமாக இருந்தாலும், நீதிக்கும் மத உரிமைகளுக்கும் குரல் கொடுப்பதில் பாரிசான் நேஷனல் இளைஞர் அணி வேறுபாடு காட்டக்கூடாது என்றார்.

“பாரிசான் நேஷனல் இளைஞர் அணி அனைவருக்குமானது என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்,” என்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்
என அர்விந்த் கூறினார்.

குறிப்பாக, Zamri Vinoth தொடர்பான விவகாரமாக இருந்தாலும் அல்லது வேறு யார் தொடர்புடைய சர்ச்சையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தைப் பார்க்காமல் கொள்கை அடிப்படையில் BN இளைஞர் அணி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!