கோலாலம்பூர், மே 16 – நெகிரி செம்பிலான் போதைப் பொருள் குற்ற துடைத்தொழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 400,000 ரிங்கிட்டிற்கும் மேலான மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு நான்கு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர். சிரம்பானில் Jalan Sungai Ujong பஸ் நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 5,203 கிரேம் ஷாபு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Ahmad Dzaffir Mohd Yussof கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரின் காரில் இந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த போதைப் பொருள் உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்படுவதற்கு திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Ahmad Dzaffir தெரிவித்தார்.