Latestமலேசியா

42,100 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக ஜே.பி.ஜே அதிகாரி மீது 40 குற்றச்சாட்டுகள்

2016  ஆம் ஆண்டு முதல்   2019ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 42,100 ரிங்கிட் லஞ்சப் பணத்தை பெற்றதாக   40    குற்றச்சாட்டுக்களை  சாலை போக்குவரத்து துறை ஜே.பி.ஜேவின் அதிகாரி   முகமட்  சொப்ரி  ஒஸ்மான்   (   Mohamad Sobri Osman )  மறுத்தார்.  அவருக்கு  எதிரான குற்றச்சாட்டை   நீதிபதி  பிரிசில்லா   ஹெமாமாலினி ( Priscilla Hemamalini)  முன்னிலையில்  மொழிபெயர்ப்பாளர் வாசித்து  முடித்தபோது  39 வயதுடைய  முகமட் சொப்ரி ஒஸ்மான்   அதனை மறுத்து விசாரணை கோரினார்.   கோலாக் கெட்டில் ஜே.பி.ஜே அலுவலகத்தில்  வாகன  பரிசோதிக்கும்  அதிகாரியாக இருந்துவந்த   முகமட் சொப்ரி  தனக்கு சொந்தமான  மே பேங்க் வங்கிக் கணக்கில் புரோ ஸ்டார் போக்குவரத்து நிறுவனத்தின்  நிர்வாகி    சவ் சீ லியோங் (  Saw Chee Leong ) என்பவரிடமிருந்து  42,100 ரிங்கிட்  லஞ்சம் பெற்றதாக   குற்றஞ்சாட்டப்பட்டார்.

2016ஆம் ஆண்டு   மார்ச்  10ஆம் தேதியிலிருந்து  2019ஆம் ஆண்டு   அக்டோபர்  8ஆம் தேதிக்கிடையே இக்குற்றத்தை புரிந்ததாக     1987ஆம் ஆண்டு   சாலைபோக்குவரத்து  சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. புரோ ஸ்டார்  நிறுவனத்தின் லோரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்காக அவர்   கையூட்டு பெற்றதாக  குற்றஞ்சாட்டப்பட்டார்.  மேலும் அவரது அனைத்துலக கடப்பிதழை  ஒப்படைக்க வேண்டும் என்பதோடு    முகமட் சொப்ரி  மாதந்திற்கு ஒரு முறை    MACC அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.  முகமட்  சொப்ரிக்கு   27,000 ரிங்கிட் ஜாமின்  அனுமதிக்கப்பட்டது.  அவர் மீதான குற்றச்சாட்டு  ஆகஸ்ட் 22 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!