Latestமலேசியா

45 ஆண்டுகளாக சிக்காத திருட்டு; 80s AI Trend-ல் சிக்கினாரா பெண்?

செப் 16 – 80s AI புகைப்பட trend-ல் இருக்கும் privacy ஆபத்துகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகள் வெளியாகி வரும் நிலையில், அதே trend 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு திருட்டையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததாக ஒரு சுவாரஸ்ய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடையில் தங்க நகையைத் திருடிவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அண்மையில் வைரலான 80s trend-ல் தனது AI புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஆனால் அந்தப் படம் போய்ச் சேர்ந்த இடம்தான் பிரச்சினை!

அன்றைய நகைக்கடை உரிமையாளர் அந்தப் படத்தைப் பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்பு நகையைத் திருடிய பெண்ணாக இவரை அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அந்தப் பெண் திருட்டை ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

45 ஆண்டுகளாக சிக்காதவர்… ஒரு AI trend-ல் சிக்கியதாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ காவல்துறை ஆவணங்கள் இதுவரை கிடைக்காததால், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

Technology வளர்ந்தால் நல்லது நடக்கும் என்பார்களே… ஒருவேளை இதுவும் அந்த ‘நல்லதுல’ ஒன்றோ!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!