Latestமலேசியா

5 நாட்களுக்குப் பின் கினாபாலு மலையிலிருந்து காப்பாற்றப்பட்ட குரோஷிய மலையேறி

கோத்தா கினாபாலு, செப்டம்பர்-11,சபா, கினாபாலு மலையில் ஏறும் போது கீழே விழுந்து காயமடைந்த 46 வயதான குரோஷிய நாட்டு மலையேறி, 5 நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரப்பட்டார்.

​செப்டம்பர் 6-ஆம் தேதி மலைையேற்றத்தின் போது விபத்தில் சிக்கிய Mauro Persic என்பவரை மீட்பதற்காக, தீயணைப்புப் படை, சபா பூங்காக்கள் ஊழியர்கள், மலை வழிகாட்டிகள் மற்றும் போலீஸார் உட்பட 43 பேரடங்கிய மீட்புக் குழுவினர் கரடுமுரடான மலைப்பாதையில் போராடி அவரை மீட்டனர்.

​கால் மற்றும் விலா எலும்புகளில் காயமடைந்த அந்த மலையேறி, Timpohon Gate தளத்தை பாதுகாப்பாக வந்தடைந்தார்.அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக ரானாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

​மீட்புக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பியதைத் தொடர்ந்து, இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!