Latestமலேசியா

5 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட எழுவர் கைது

ஷா அலாம், மே 20 – ஐந்து லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் கிள்ளான் பள்ளத்தாக்கில் அவற்றை விநியோகித்து வந்த இரண்டு கும்பல்களை முறியடித்ததோடு ஒரு தம்பதியர் உட்பட எழுவரை கைது செய்தனர். சிலாங்கூர் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறை மற்றும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ் குழுவினர் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த வெற்றி கிடைத்திருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar தெரிவித்தார். இம்மாதம் 15ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் கணவன் மனைவி மற்றும் அவர்களது மகன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் பின் மற்றொரு ஆடவர் கைது செய்யப்பட்டதோடு அவரது காரின் பின்னால் 1,038 ஷாபு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 21 வயது முதல் 44 வயதுடைய அந்த நால்வரும் போதைப் பித்தர்கள் என அவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் தெரியவந்ததாக Hussein கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, Sungai Way யில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயன்படுத்திய Mitsubishi Triton வாகனத்திலிருந்து 22,051 கிரேம் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இரண்டு சந்தேக நபர்களும் தங்களது வாகனத்தின் மூலம் போலீஸ் வாகனத்தை மோதிவிட்டு தப்பியோட முயன்ற போதிலும் அந்த வாகனத்தின் டயர்களை சுட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து பந்தாய் டாலாமில் மற்றொரு ஆடவனை கைது செய்த போலீசார் அவனது வீட்டிலிருந்து மறைத்துவைக்கப்பட்டிருந்த 21,089 கிரேம் கஞ்சாவையும் பறிமுதல் செய்ததாக Hussein தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!