Latestஉலகம்

60 அடி உயரத்திலிருந்து ராட்டினம் விழுந்தது; பெண்கள் குழந்தைகள் உட்பட 30 பேர் காயம்

லக்னோ, ஏப்-7- உத்தர பிரதேசத்தில் குஷிநகர் வட்டாரத்தில் ஆலய நிகழ்ச்சி ஒன்றில் 80 பேர் ஏறியிருந்த ராட்டினம் 60 அடி உயரத்திலிருந்து விழுந்ததில் அதில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களில் 10 பேர் கடுமையாக காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது . அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றியிருந்த அந்த ராட்டினம் இரண்டாவது சுற்றின்போது அது முறியும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து கவிழ்ந்தது.

அந்த ராட்டினத்தின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது அடித்தளத்திலிருந்து முற்றாக கவிழ்ந்தது என கூறப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த போலீஸ்கரர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டர்களை மீட்கும் நடவடிக்கைக்கு உதவினர்.

அந்த ராட்டினத்தில் இருந்தவர்கள் எச்சரித்த போதிலும் அதன் ஏற்பாட்டாளர்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிகமானோரை ஏற்றியதால் அந்த ராட்டினம் விழுந்ததாக கூறப்பட்டது.

அதிகமான இரும்புகளைக் கொண்டு ராட்டினம் அமைக்கப்பட்டிருந்ததால் அதில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் இரும்புத் துண்டுகளை வெட்டிய பின்னர் அதில் சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த ஆறு ஆம்புலன்ஸ் வண்டிகள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.

காயம் அடைந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!