Latestமலேசியா

65 வயதில் ஏழாவது பிள்ளைக்கு தந்தையாகிறார், பாப் பாடகர் ஜமால் அப்தில்லா

கோலாலம்பூர், ஜூன் 26 – நாட்டின் பழம்பெரும் பாப் பாடகரான, 65 வயது டத்தோ ஜமால் அப்தில்லா (Datuk Jamal Abdillah), தனது 28 வயது மனைவி டத்தின் ஜாய் இஸ்ஸாதி கிருதினுடன் (Datin Zai Izzati Khiruddin), ஏழாவது பிள்ளையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், ஜமால் மற்றும் ஜாய் இஸ்ஸாட்டி தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். ஐந்தாவது பிள்ளை அடுத்தாண்டு தொடக்கத்தில் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இம்முறை ஜாய் இஸ்ஸாட்டியின் கர்ப்பம் அவ்வளவு எளிதாக இல்லை.

உடல் நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், எட்டு நாட்கள் உணவு எதையும் உட்கொள்ள முடியாததால், இறுதியில் IJN – இருதய கழகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக ஜமால் கூறியுள்ளார்.

அதனால், “மருந்துகளை உட்கொள்ளும் போது கவனமாக இருங்கள், அவை உடலுக்கு நல்லது இல்லை. எனது மனைவிக்கு நேர்ந்ததை போல, வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்பதற்காக தாம் தனது மனைவியின் கர்ப்பம் குறித்து அறிவிப்பதாக” ஜாமால் தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, ஜமால் ஜாய் இஸ்ஸாட்டி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருக்கும் வேளை ; ஜமாலின் முதல் திருமணம் வாயிலாக அவருக்கு 17 மற்றும் 21 வயதில் இரு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!