Latestமலேசியா

7 நாட்களில் 12 மலைகள்: கால் காயத்திற்கு மத்தியில் Gunung Jerai மலையேறும் லோகசந்திரன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 7 நாட்களில் 12 மலைகளை ஏறும் சாதனைப் பயணத்தில் இறங்கியுள்ள இளைஞர் லோகசந்திரன் ராமசந்திரன், இன்று காலை கெடாவில் உள்ள Gunung Bintang மலையேறினார்.

எனினும், கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் மற்றும் கால் காயம் காரணமாக, உடன்வரும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அம்முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு Gunung Jerai மலையை ஏறும் முயற்சியில் லோகசந்திரன் குழுவினர் தொடங்கியுள்ளனர்.

கைவிடப்பட்ட Gunung Bintang மலையேற்றம் பின்னர் மறுஅட்டவணையிடப்படும் என்றார் அவர்.

இம்முயற்சியில் இன்னமும் 3 மலைகள் எஞ்சியுள்ள நிலையில், அவை நாளை முழுமைப்பெறும்.

இதன் ஆகக் கடைசி தகவல்களை வணக்கம் மலேசியா நாளை மீண்டும் உங்களுக்குக் கொண்டு வரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!