Latestமலேசியா

73-ஆவது உலக அழகிப் போட்டியில் 3-ஆவது இடத்தை வென்றார் மலேசியாவின் தானுஸியா செட்டி

ஹனோய், செப்டம்பர்-6,மலேசியப் பிரதிநிதியான தானுஸியா செட்டி வியட்நாமில் நடைபெற்ற 73-ஆவது Miss World உலக அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

111 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்றப் இப்போட்டியில் டோமினிக் குடியரசின் Joheirry Mola புதிய உலக அழகியாக மகுடம் சூடினார்; ஸ்பெயின் நாட்டின் Elisabeth Reynes Alabern இரண்டாவதாக வந்தார்.

இந்நிலையில், ஆங்கில ஆசிரியையான தானுஸியா, தனது கூர்மையான அறிவுத்திறன், கம்பீரம் மற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பால் அனைத்துலக நடுவர் குழுவை பெரிதும் கவர்ந்து மூன்றாவதாக வந்தார்.

​இவரது இந்த வரலாற்று வெற்றி, 1998-ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் லீனா தியோ படைத்த மலேசியாவின் மிகய உயர்ந்தச் சாதனையை 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சமன் செய்துள்ளது.

​போட்டிக்குப் பிறகு பேசிய தானுஸியா, தமக்கு ஆதரவளித்த அனைத்து மலேசியர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதோடு, இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக சேவைக்கும் தொடர்ந்து பாடுபடப்போவதாக உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!