Latestமலேசியா

80 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு மின் பயனர்களுக்கு நிவாரணம்; 800 kWh ஆக பாதுகாப்பு வரம்பு உயர்வு

கோலாலம்பூர், செப்-18 –மின் கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையில், வீட்டு மின் பயனர்களுக்கான பாதுகாப்பு வரம்பு மாதத்திற்கு 600 kWh-லிருந்து 800 kWh-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் TNB-யின் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட அல்லது சுமார் 90 விழுக்காட்டு வீட்டு பயனர்கள் பயனடையவுள்ளனர்.

மாதத்திற்கு 800 kWh மற்றும் அதற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு AFA எனப்படும் எரிபொருள் செலவு சீரமைப்பு கட்டணம், 8 விழுக்காடு சேவை வரி மற்றும் RM10 சில்லறை கட்டணம் விதிக்கப்படாது.

இந்தக் கூடுதல் பாதுகாப்பு செப்டம்பர் மாத மின் பயன்பாட்டிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என TNB தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான டத்தோ Ir. Ts. Shamsul Ahmad தெரிவித்தார்.

முன்னதாக 600 kWh வரை வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்போது 800 kWh-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மேலும் சுமார் 10 லட்சம் வீட்டு பயனர்கள் இதன் மூலம் பயனடையவுள்ளனர்.

இதனிடையே, நிவாரணம் கிடைத்தாலும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என TNB வலியுறுத்தியுள்ளது.

myTNB செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கண்காணிப்பது, குளிர்சாதனப் பெட்டியை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை பயன்படுத்துவது மற்றும் குறைந்த கட்டண நேரங்களுக்கான TOU திட்டத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட வழிகள் குறித்து Shahannom Izham விளக்கினார்.

மின் கட்டணத்தில் இந்தக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணத்துடன் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் பழக்கமும் தொடர வேண்டும் என TNB பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!