
கோலாலம்பூர், அக்டோபர் 22 – மலேசியாவில் பள்ளிகளுக்கு அருகில் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்க, ஒன்பது மாநிலங்களில் பாதுகாப்பான பள்ளி மண்டலத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) கூறுகையில், பள்ளிகளுக்கு அருகில் ஆண்டுதோறும் சராசரியாக 70 விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்தத் திட்டத்தின்படி, பள்ளிக்கு முன்னும் பின்னும் தலா 250 மீட்டர் தூரத்திற்கு வாகனங்களின் வேகம் மணிக்கு 30 கிலோமீட்டராக இருக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் சாலையைக் கடப்பதற்கான பாதுகாப்பான பாதைகள், நடைபாதைகள் மற்றும் வாகனங்களில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்குவதற்கான இடங்கள் அமைக்கப்படும்.
ஆய்வில், 76.6 விழுக்காடு மாணவர்கள் பள்ளியைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பற்றதாக உணர்வது தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் செயல்திறனைப் பொறுத்து, நாடு முழுவதுமுள்ள மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அதிக விபத்து அபாயமுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.



