Latestமலேசியா

9 ஆண்டுகள் சாலை வரி செலுத்தவில்லை: லாரிகள் மீது சாலை போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை

ஷா அலாம், மே 22- கடந்த 2 நாட்களில், குவாங்-ராவாங் ஜாலான் BRP7 மற்றும் பெர்சியாரன் சைபர் பள்ளத்தாக்கில், 7 முதல் 9 ஆண்டுகள் வரை, சாலை வரி செலுத்தாமலும் காப்பீடு இல்லாமலும் இயங்கி வந்த 3 லாரிகள் சாலை போக்குவரத்துத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளைச் செலுத்தி வந்த ஓட்டுனர்கள், கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தப்பி விட்ட நிலையில், அவர்கள் வெளிநாட்டவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருவதோடும், தற்போது லாரிகளின் வாகன உரிமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ​​போக்குவரத்துத் துறை அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குனர் முஹம்மது கிஃப்லி மா ஹாசன் (Muhammad Kifli Ma Hassan) தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!