Latestமலேசியா

9 மாத ஆண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ஆடவருக்குத் தூக்குத் தண்டனை

புத்ராஜெயா, நவம்பர்-21,9 மாத ஆண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த 41 வயது ஆடவரை சாகும் தூக்கிலிட, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுங்குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்க உயர் நீதின்றம் தவறி விட்டதாகக் கூறி, Mohamed Badruldin Mohamed என்ற அந்த ஆடவருக்கு முன்னதாக விதிக்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்தது.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி, சிலாங்கூர், Ara Damansara-வில் இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது.

வேலைக்குச் சென்ற தாய் ஒருவர், தனது 9 மாதக் குழந்தையை அந்த ஆடவரின் மனைவியிடம் பராமரிப்புக்காக ஒப்படைத்திருந்தார்.

ஆனால், அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திய அவ்வாடவர், குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதோடு, மூச்சுத்திணறச் செய்து கொன்றது விசாரணையில் உறுதியானது.

குழந்தையின் உடலில் கண்டெடுக்கப்பட்ட மரபணு ஆதாரங்களும் குற்றத்தை உறுதிப்படுத்தின.

குற்றவாளியின் அச்செயல் மிகவும் கொடூரமானது என்றும், தற்காத்துக்கொள்ள இயலாத குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மரண தண்டனையே பொருத்தமானது என்றும் நீதிபதி டத்தோ Hayatul Akmal Abdul Aziz தெரிவித்தார்.

இதையடுத்து, அரசுத் தரப்பின் மேல்முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், கொலைக் குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!