கோலாலம்பூர், ஏப்ரல்-1, தம்மைத் தவறாக மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டதற்காக மேன்மைத் தங்கிய பஹாங் சுல்தான் கண்டித்ததை அடுத்து, Harapan Daily அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
சம்பந்தப்பட்டச் செய்தியை உடனடியாக மீட்டுக் கொண்டு, தங்களது செய்தி அமைப்பில் இருந்தே அதனை நிரந்தரமாக நீக்கி விட்டதாகவும் அந்த இணைய நாளேடு அறிவித்துள்ளது.
‘பாஸ் கட்சி கொண்டு வரும் சித்தாந்தத்திற்கு பஹாங் சுல்தான் எச்சரிக்கை’ என்ற தலைப்பில் வெள்ளிக் கிழமை Harapan Daily வெளியிட்ட செய்தி முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.
அது குறித்து அல் சுல்தான் அப்துலா பெருத்த ஏமாற்றம் தெரிவித்திருந்தார்.
அச்செய்தி அவதூறு என்றும், சமூக நல்லிணக்கத்துக்கு அது எதிர்மறையானத் தாக்கத்தைக் கொண்டு வரும் என்றும் அவர் கண்டித்திருந்தார்.
ஊடகங்கள், ஒரு செய்தியை வெளியிடும் போது, அதன் உண்மை அர்த்தம் மாறாமல் இருப்பதை அவை உறுதிச் செய்ய வேண்டும்.
அதை விடுத்து சொந்தமாக வியாக்கினம் செய்துக் கொண்டு, செய்திகளைத் திரித்து வெளியிடக் கூடாது எனவும் அல் சுல்தான் அப்துல்லா நினைவுப்படுத்தியிருந்தார்.