யான், ஏப்ரல் 15 – கெடா, யான், ரூவாட் கடற்கரையில், மடிந்து தரைத்தட்டிக் கிடந்த “டால்பின்” மீன் ஒன்று மீட்கப்பட்டது.
அச்சம்பவம் குறித்து, நேற்று மாலை மணி ஐந்து வாக்கில், பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை, யான் மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி லெப்டனன் ஜுல் இஸ்சி ஜுல்கிப்ளி உறுதிப்படுத்தினார்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அங்கு கரை ஒதுங்கி கிடந்த மடித்த டால்பினை மீட்டனர்.
படகு இயந்திரத்தின் விசிறி பட்டு அந்த டால்பின் மடிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், கெடா மீன்வள துறைக்கு தகவல் வழங்கப்பட்ட வேளை ; மடிந்த டால்பினின் சடலம் மேல் நடவடிக்கைக்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
கரை ஒதுங்கி கிடந்த அந்த டால்பில், 1.8 மீட்டர் நீளமும், 220 கிலோகிராம் எடையும் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், கெடாவில், டால்பினை உட்படுத்தி பதிவாகி இருக்கும் முதல் சம்பவமாகவும் அது கருதப்படுகிறது.