Latestமலேசியா

கோலா குபு பாரு தேர்தலில் மலாய் வேட்பாளரா ? கருத்துரைக்க DAP மறுப்பு

கோலாலம்பூர், ஏப் 18 – சிலாங்கூர் Kuala Kubu Baru  சட்டமன்ற இடைத் தேர்தலில்   பக்காத்தான் ஹராப்பான் சார்பில்  மலாய்க்காரர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என  ஆருடங்கள் வெளியாகியிருப்பது குறித்து  DAP   தலமைச் செயலாளர்    Anthony Loke  கருத்துரைக்க மறுத்துவிட்டார்.  எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இன்னமும் வேட்பாளரை  முடிவை செய்யவில்லை.  பட்டியலில் சில வேட்பாளர்கள்  இடம் பெற்றுள்ளனர்.  அவர்களில் எவரையும்    நாங்கள் பரிசீலிக்க முடியும்  என  அவர் கூறினார்.   காலஞ்சென்ற   DAP யின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும்   முன்னணி  வழக்கறிஞருமான கர்ப்பால் சிங்கிற்கு Jaya One னில்  நினைவு கூறும் நிகழ்சியில் கலந்துகொண்ட  பின் செய்தியாளர்களிடம் பேசியபோது    Anthony Loke  இதனை தெரிவித்தார்.  

எதிர்வரும் மே மாதம் 11 ஆம்தேதி நடைபெறவிருக்கம்    Kuala Kubu Baru  சட்டமன்ற தொகுதிக்காக இடைத் தேர்தலில்   உலு சிலாங்கூர் நகரான்மைக் கழக உறுப்பினர்    Saripah  Bakar   பாக்காத்தான் ஹரப்பான்  வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என இணையத்தள ஊடகம்  ஒன்றில்  தகவல் வெளியாகியிருந்தது.  கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே   Saripah  வுக்கு நல்ல அறிமுகம் இருப்பதால்  அவர்   வேட்பாளராக நிறுத்தப்படலாம் என     பக்காத்தான் ஹராப்பானுக்கு அணுக்கமான வட்டாரங்கள்   மூலம்  தெரியவருகிறது.   Kuala Kubu Baharu  சட்டமன்ற தொகுதியில்   மலாய்க்கார வாக்காளர்கள்  50 விழுக்காட்டையும், சீன வாக்காளர்கள்  30 விழுக்காட்டையும், இந்திய வாக்காளர்கள்  18 விழுக்காட்டையும் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!