Latestமலேசியா

கேடட் அதிகாரி சூசைமாணிக்கம் இறப்பதற்கு முன் வாயில் நுரை வெளியேறியது முன்னாள் கடற்படை அதிகாரி சாட்சியம்

கோலாலம்பூர், ஏப் 18 – கேடட் அதிகாரி சூசைமாணிக்கம் இறப்பதற்கு முன் அவரது வாயில் நுரை வெளியேறியதோடு அவரது உள்ளங்கையில் இரத்தம் வந்ததோடு அவரது உடலில் வீக்கம் காணப்பட்டதாக அரச மலேசிய கடற்படையின் முன்னாள் அதிகாரி Christian Bernard செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது தெரிவித்தார். குளியல் அறையில் இருந்த சூசைமாணிக்கத்தின் சட்டையை திறக்கும்படி
leftenan muda R . Rashwin கேட்டுக்கொண்டபோது தாம் இதனை கண்டதாக தற்போது தனியார் துறையில் வேலை செய்துவரும் 31 வயதுடைய Christian Bernard கூறினார். அப்போது நான் மதிய உணவு உட்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். நான் அங்கு வந்தபோது சூசைமாணிக்கத்திடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. அவரது உள்ளங்கையில் இரத்தம் வெளியேறியது. வாயில் நுரை தள்ளியது, குளியல் அறையிலேயே அவர் மலம் கழித்துவிட்டார் . அவரிடமிருந்து எந்தவொரு பதில் இல்லாவிட்டாலும் தனது அறைக்கு நடந்துவந்து கட்டிலில் அவர் உட்கார்ந்தார்.

மயக்கம் அடையும் தருவாயில் அவர் இருந்ததால் அவரது முகம் மற்றும் வாயை துடைத்துவிட்டேன். அவரது கன்னத்தில் லேசாக அறைந்தேன். எனினும் அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவரை லுமுட்டிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுச் செல்லும்படி Rashwinவினை தாம் கேட்டுக்கொண்டதாகவும் கல்லூரி விடுதியிலிருந்து அவரை தூக்கிச் சென்றபோது அவர் இறந்துவிட்டார் என வழக்கறிஞர் Latheefa Koyaவின் கேள்விக்கு பதில் அளித்தபோது Christian Bernard தெரிவித்தார். தமது மகன் சூசைமாணிக்கத்தின் மரணத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமும் கவனக்குறைவுமே காரணம் என்பதால் இழப்பீடு கோரி அரச மலேசிய கடற்படையின் அதிகாரி, தளபதி, மலேசிய ராணுவப் படை மன்றம், தற்காப்பு அமைச்சர் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக S Joseph வழக்கு தொடுத்திருக்கிறார். கடுமையான பயிற்சியினால் சம்பவம் நடந்த அன்றைய தினம் தமது மகன் சூசைமாணிக்கம் மிகவும் களைத்து காணப்பட்டதால் அவரது உடல்நலன் மோசம் அடைந்ததோடு கடற்படை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தததாக ஜோசப் வழக்கு தொடுத்துள்ளார். நீதிபதி Idah Ismail முன்னிலையில் நடைபெற்றுவரும் இந்த வழக்கு விசாரணை மே 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!