கோலாலம்பூர், ஏப் 24 – மே மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming கின் உதவியாளரை DAP வேட்பாளராக நிறுத்தும் என ஆருடங்கள் வெளியாகியுள்ளன. Nga Kor Ming கின் பத்திரிகை செயலாளரான Pang Sock Tao என்பவரை DAP வேட்பாளராக முன்மொழிந்திருப்பதாக பக்காத்தான் ஹராப்பானின் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து Nga Kor Ming கிடம் வினவப்பட்டபோது அவர் இத்தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ மறுத்துவிட்டார். இன்றிரவு வேட்பாளர் விவரம் அறிவிக்கப்படும் என்பதால் அதுவரை பொறுத்திருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
Check Also
Close