Latestமலேசியா

ஹெலிகாப்டர் விபத்து குறித்து மற்றவர்களை புண்படுத்தும் கருத்தை வெளியிட்ட வர்த்தகருக்கு ரி.ம 23,000 அபராதம்

தைப்பிங், ஏப் 26 –

அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான   இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில்  மோதி  10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  மற்றவர்களை புண்படுத்தும்  வகையில்  கருத்தை வெளியிட்ட  தைப்பிங்கை சேர்ந்த இணைய வர்த்தகர்    Saifuddin Shafik என்பவருக்கு  23,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.  தனக்கு எதிரான  குற்றச்சாட்டை   35 வயதுடைய  Saifuddin  Shafik  ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து  தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தை சேர்ந்த  நீதிபதி  Nabisha Ibrahim இந்த அபராதத்தை  விதித்தார். நீங்கள் மட்டுமின்றி    பொதுமக்களும்  இதுபோன்ற தவறுகளை  மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு  ஒரு பாடமாக  இந்த தண்டனை இருக்க வேண்டும் என  தமது தீர்ப்பில் நீதிபதி  Nabisha தெரிவித்தார்.  சமூக வலைத்தளங்களை  மிகவும்  கவனமாக பயன்படுத்த வேண்டும் என  அவர் கேட்டுக் கொண்டார். 

 தமது  நடவடிக்கைக்காக   அந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின்  குடும்ப உறுப்பினர்கள்,  ஆயுத படைகள் மற்றும் பொதுமக்களிடமும்  நீதிமன்றத்தில்    Saifuddin    மன்னிப் கேட்டுக் கொண்டார். எனது கருத்துக்களை வெளியிட்ட பின் எனது தவறை நான்  உணர்ந்துகொண்டேன். இதுபோன்ற  தவறுகளை இனி தாம் செய்யபோவதில்லையென  அவர் தெரிவித்தார்.     1998ஆம் ஆண்டின்   தொடர்பு மற்றும்  பல்லூடக சட்டத்தின்   233ஆவது  விதியின்   உட்பிரிவு  (1)  (a) (ii)  கீழ்   Saifuddin  மீது குற்றஞ்சாட்டப்பட்டது.   இம்மாதம் 23 ஆம் தேதி பிற்பகல் மணி 1.15அளவில்  Gedung  Sari Jalan Harmoni,  Pusat Bandar Bagan Serai யில் அவர்  இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!