பாலிங், மே 13 – பாலிங்கில் Lata Bayu நீர்வீழ்ச்சியில் தனது மூன்று நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது காணாமல்போன ஆடவர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் இன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. உல்லாச இடத்திலிருந்து 15 மீட்டர் தொலையில் ஆற்றின் கீழ் மட்டத்தில் 27 வயதுடைய
Muhammad Luqman Zuraidi யின் உடல் மீட்கப்பட்டது. நீர்மட்டத்திற்கு கீழே முக்குளிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவர் மூழ்கி மாண்டிருக்கலாம் என்றும் முக்குளிப்புக்கு பயன்படுத்தும் முகக் கவரியோடு அவரது உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தேடும் நடவடிக்கையின்போது மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டபோதிலும் எந்தவொரு அறிகுறியும் கிடைக்கவில்லை என்பதால் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இரு குழுக்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபின் இன்று காலை 11 மணியளவில் Muhammad Luqman உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Shamsudin Mamat தெரிவித்தார்.