Latestமலேசியா

பினாங்கில் உணவு விடுதியில் நடந்த கைகலப்பு; காணொளி வைரல்

ஜோர்ஜ் டவுன், மே 21 – பினாங்கில் , jalan Sultan Ahmad Shah சாலையில் உணவு விடுதி ஒன்றில் கும்பல் ஒன்று சம்பந்தப்பட்ட மோதல் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 43 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் உள்ள சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் பினாங்கு மாநில முன்னாள் எம்.பியின் மகன் என நம்பப்படும் டத்தோ பிரமுகர் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து புகார் பெற்றதாக பினாங்கு கிழக்குக் கரை மாட்ட போலீஸ் தலைவர் Raziam Ab Hamid தெரிவித்தார். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அந்த தகராறுக்கான காரணம் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மே 11ஆம்தேதி அதிகாலை ஒரு மணியளவில் அந்த உணவு விடுதியில் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய இளைஞர் பாணம் வாங்கிக்கொண்டிருந்தபோது அவரை அங்கு வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆடவர்களும் தாக்கியதாக நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த 19வயது இளைஞரும் 26 வயது பெண்ணும் அந்த சண்டையை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர், எனினும் அவர்களும் பின்னர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பின் அனைத்து தரப்பினரும் அங்கிருந்து வெளியேறியதோடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்ததாக தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!