கோலாலம்பூர் , மே 6 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சைய்ன் ராயன் ( Zayn Rayyan ) கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவுவற்காக கைது செய்யப்பட்ட அவனது பெற்றோருக்கு தடுப்புக் காவலை மேலும் நீட்டிப்பதற்கு போலீஸ் நாளை நிதிமன்றதில் விண்ணப்பிக்கும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் (Hussein Omar) தெரிவித்திருக்கிறார். அவர்களை தடுத்து வைப்பதற்கான கால அவகாசம் முடிவடைவதால் அதனை நீட்டிப்பதற்கு தங்களது தரப்பு விண்ணப்பிக்கும் என அவர் கூறினார். சைய்ன் ராயனின் பெற்றோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு விட்டதா என்று வினவப்பட்டபோது இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக உசேய்ன் மறுமொழி தெரிவித்தார்.
இதனிடையே ஜெய்ன் ராயன்னின் பெற்றோர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை சந்திப்பதற்கு அவர்களது வழக்கறிஞருக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். சைய்ன் ராயானின் பெற்றோர்களை சந்திப்பதற்கு போலீசிடம் மனுசெய்த போதிலும் அவர்கள் அனுமதி வழங்கவில்லையென தற்போது அவர்களின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அரசு தரப்பு துணை வழக்கறிஞரான பாமி அப்துல் மொய்ன் ( Fahmi Abdul Moin ) தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.