Latestமலேசியா

Legendary Riders Club Malaysia & வணக்கம் மலேசியா ஒத்துழைப்பில் வீட்டில் ஒரு மரக்கன்று நடும் சவால்

கோலாலம்பூர், ஜூன்-12, ஜூன் 5, உலகக் சுற்றுச் சூழல் தினத்தை ஒட்டி Legendary Riders Club Malaysia-வும் Tanah Aina-வும் இணைந்து Farah Soraya Resort-டில் பழமரக் கன்றுகளை நடும் உன்னதத் திட்டத்தை மேற்கொண்டனர்.

அதன் போது 40 வகையான பழமரக் கன்றுகள் அங்கு நடப்பட்டன.

பசுமைக் காப்போடு, வன விலங்குகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் கிடைப்பதை உறுதிச் செய்யவும் மரம் நடவு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் அந்நன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இவ்வட்டாரத்திலேயே, தங்களது நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் எனப்படும் ESG அம்சங்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் முதல் மோட்டார் சைக்கிள்ளோட்டிகள் கிளப்பாக Legendary Riders Club Malaysia விளங்குகிறது.

பொழுதுப் போக்கிற்காக மோட்டார் சைக்கிளோட்டுவதோடு நின்று விடாமல், ‘DRIVE ESG IN EVERY RIDE,’ என்ற தாரக மந்திரத்தோடு இந்த பசுமைப் புரட்சியை அக்கிளப் முன்னெடுத்துள்ளது.

இவ்வேளையில், மரம் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ‘நீங்களும் மரம் நடலாமே’ என்ற சவாலையும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.

பொது மக்களும் தங்கள் வீடுகளில் ஒரு மரக்கன்றோ அல்லது செடியோ நடுவதே அச்சவாலாகும்.

அவ்வாறு மரக்கன்றுகளை நடுபவர்கள் அவற்றின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி,
The Legendary Riders Club Malaysia, வணக்கம் மலேசியா ஆகியவற்றை Tag செய்யலாம்.

இயற்கைப் பாதுகாப்பு நோக்கிலான இச்சவாலில் ஏராளமானோர் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!