கோத்தா கினபாலு, ஜூன் 20 – 40,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு சேவை ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் ஒருவரை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. சபா மாநிலத்திலுள்ள அரசாங்க பள்ளியில் நிர்வாக உதவியாளராக பணிபுரியும் 50 வயது பெண், Tawau விலுள்ள MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக இன்று தாவாவ் ( Tawau ) சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். அந்த சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் லஞ்சம் பெறுவதற்காக நிர்வாக உதவியாளர் என்ற தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக MACC தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதை சபா MACC இயக்குனர் டத்தோ S. கருணாநிதி ( Karunanithy) உறுதிப்படுத்தியதோடு 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார் என தெரிவித்தார்.