Latestமலேசியா

நகரங்களில் கார் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துவதில் இருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம்

கோலாலம்பூர், ஜூலை-4, மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக, நகரங்களில் கார் நிறுத்துமிட கட்டண வசூலிப்பில் அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம்.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் (Nga Kor Ming) அதனைக் கோடி காட்டியுள்ளார்.

பசுமைத் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் விதமாக மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான கார் பதிவு எண் பட்டையை அறிமுகப்படுத்தும் அண்மைய அறிவிப்புக்கு ஏற்ப, இந்த உத்தேசப் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் சாத்தியங்கள் குறித்து ஊராட்சி மன்றங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

லண்டனில், கார் நிறுத்துமிட கட்டணங்களைச் செலுத்துவதில் இருந்து EV வாகனங்களுக்கு விலக்கு வழங்கப்படுவதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில், நாடு முழுவதும் அடுத்தாண்டுக்குள் 10,000 EV charging நிலையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் இலக்கு, எதிர்பார்க்கப்பட்டதை விட மெதுவாக நகருவதை அவர் ஒப்புக் கொண்டார்.

இதுவரை அத்தகைய 3,000 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

EV வாகனங்களுக்கு ஏற்கனவே குறைந்த விலையிலான சாலை வரி விகிதத்தைப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!