Latestமலேசியா

MEX நெடுஞ்சாலையில், பெண்ணிடம் அடாவடியாக நடந்து கொண்ட இ-ஹெய்லிங் ஓட்டுனருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு விட்டது ; போலீஸ் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 5 – பெண் பயணி ஒருவரை தாக்கி, அவரை காரிலிருந்து பிடித்து இழுத்து வெளியே தள்ளிவிட்டுச் சென்ற, இ-ஹெய்லிங் ஓட்டுனர் கைதுச் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுவிட்டதாக, பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் ACP கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

ஜூன் 13-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, மாயா என மட்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள பாதிக்கப்பட்ட பெண், தாம் உலோக போத்தலால் தாக்கப்பட்டு, காரிலிருந்து வலுக்கட்டாயமாக பிடித்து வெளியே தள்ளப்பட்டதோடு, இ-ஹெய்லிங் ஓட்டுனர் தம்மை நெடுஞ்சாலையில் கைவிட்டுச் சென்றதாக, சமூக ஊடகங்களில் பகிந்துள்ளார்.

அச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில், பாதிக்கப்பட்ட பெண் செய்த புகாரை அடுத்து, 28 வயதான சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டதை மஷாரிமான் உறுதிப்பாடுத்தினார்.

ஜூன் 19-ஆம் தேதி அவனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட வேளை, ஈராயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதனால், அச்சம்பவம் தொடர்பான காணொளியை மீண்டும் பகிர்ந்து வைரலாக்க வேண்டாம் என மஷாரிமான் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, டோல் கட்டணம் இல்லாத வழியை பயன்படுத்துமாறு கோரியதால், மெக்ஸ் நெடுஞ்சாலையில், பெண் ஒருவர் இ-ஹெய்லிங் ஓட்டுனரால் தாக்கப்பட்டு, காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளப்பட்டு, கைவிடப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!