கோலா திரங்கானு, ஜூலை 18 – திரங்கானு, பெசுட், பெர்ஹெண்டியான் தீவிலுள்ள, ஸ்பா உடம்புபிடி நிலையத்தில், பெண் பணியாளர் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட மொரோக்கா சுற்றுப் பயணிக்கு எதிராக கோலா திரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
23 வயதான நூரோ யாசின் (Nourou Yassine) எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான அந்த குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
19 வயது நூருல் நபிலா நடாஷா (Nurul Nabila Natasha) என்ற பெண்ணிடம், வன்முறையை பயன்படுத்தி ஆபாசமாக நடந்து கொண்டதாக, அவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
எனினும், அவ்வாடவனை எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், இரு நபர் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அதோடு, அவ்வாடவன் தனது பயணக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட்டு ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.